ஆலங்குளம் அருகே மாற்றுக் கட்சியை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் திமுகவில் மாவட்ட செயலாளர் முன்னிலையில் இணைந்தனர்.

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே புதுப்பட்டியில் காசிநாதபுரம் காத்த புரம் ஓடைமறிச்சான் பகுதியை சேர்ந்த சமக, அதிமுக, அமமுக உள்ளிட்ட மாற்றுக் கட்சியினர் 50 க்கும் மேற்பட்டோர் தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் சிவ பத்மநாதன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். இந்த நிகழ்ச்சியில் பாப்பாகுடி ஒன்றிய செயலாளர் மாரிவண்ணமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.
