கலெக்டர் தலைமையில் வாக்குச்சாவடி மறு சீரமைப்பு கூட்டம். வாக்குச்சாவடி மறுசீரமைப்பு கூட்டம் விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சாத்தூர், அருப்புக்கோட்டை, திருச்சுழி ஆகிய தொகுதிகளில் உள்ள 1200 வாக்காளர்கள் உள்ள வாக்குச்சாவடிகளை பிரித்து புதிய வாக்குச்சாவடி அமைத்தல் மற்றும் தொலைதூரம் சென்று வாக்களிக்கும் வாக்காளர்கள் சிரமப்படுவதை தடுக்கும் வகையில் அருகில் உள்ள வாக்குச்சாவடிக்கு மாற்றம் சம்பந்தமாக கூட்டம் நடைபெற்றது. சட்டமன்ற தொகுதிகளின் வாக்குச்சாவடிகளின் குறைகளை கூறினார்கள்.





