மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே நக்கலப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட குளத்துப்பட்டியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட அருந்ததியர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில்கழிவு நீர் கால்வாய் இல்லாதால் கழிவு நீர் செல்வதற்கு வழியின்றி குடியிருப்பு பகுதியில் குளம் போல் தேங்கி புழு பூச்சிகளுடன் காணப்படுவதால் குழந்தைகள் மற்றும் முதியோர்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்படும் என பொதுமக்கள் அச்சத்துடன் தெரிவித்தனர்.,
மேலும் இது குறித்து ஊராட்சி ஒன்றிய அலுவலகம், மாவட்ட ஆட்சியர், உசிலம்பட்டி எம்எல்ஏ மற்றும் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் வரை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

விரைந்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் இதனை யார் நிவர்த்தி செய்து கொடுக்கிறார்களோ அவர்களுக்கு வரும் சட்டமன்றத் தேர்தலில் வாக்களிப்பதாகவும் இல்லையென்றால் தேர்தலை புறக்கணிப்பதாகவும் வேதனை தெரிவித்தனர்.
இது குறித்து நேற்று அரசியல் டுடே செய்தி வெளியான நிலையில்

இன்று உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் பாண்டி தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்து ஜேசிபி இயந்திரம் மூலம் கழிவு நீரை அகற்றி வழிவகை செய்து தற்காலிகமாக 8 அடி உயரம் இரண்டரை மீட்டர் அகலத்திற்கு உறிஞ்சி குழி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
மேலும் மதுரை- தேனி நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள ஆக்கிரமிப்புக்கள் அகற்றிய பின்பு நிரந்தரமாக கழிவு நீர் கால்வாய் அமைத்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.



