தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைகள், செயல்திட்டங்களை அறிவித்தார் விஜய். பிளவுவாத சக்திகள், ஊழல்வாதிகளே பிரதான எதிரிகள் என விஜய் பிரகடனம்!
🗞️ தவெக-வை நம்பி வரும் கூட்டணிக் கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு தரத் தயார். 2026ம் ஆண்டு ஒரு புதிய அரசியல் களத்தின் புத்தாண்டு என்றும் விஜய் பேச்சு!
🗞️ த.வெ.க. மாநாடு முடிந்து லட்சக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் புறப்பட்டதால் வாகன நெரிசல். 12 கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் 6 மணி நேரம் காத்திருப்பு!
🗞️ த.வெ.க. மாநாட்டில் மயங்கி விழுந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு. மாநாடு முடிந்ததும் நாற்காலிகள், இரும்பு தடுப்புகளைச் சேதப்படுத்திய தொண்டர்கள்!
🗞️ திமுக மீதான த.வெ.க. தலைவர் விஜய்யின் விமர்சனம் குறித்து கவலையில்லை. அரசியல் களத்தில் பல கட்சிகளை எதிர்கொண்ட இயக்கம் திமுக என ஆர்.எஸ். பாரதி பேட்டி!