@ தமிழகம் முழுவதும் நிறுத்தப்பட்ட 800 வழித்தடங்களில் மீண்டும் பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்து துறை அமைச்சர் தகவல்.
@ உயர்கல்வித் துறை சார்பில் கல்லூரிகளுக்கு ரூ.52.75 கோடியில் கட்டப்பட்ட புதிய கட்டிடங்களை முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.
@ தமிழகம் முழுவதும் 65 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: உள்துறை செயலராக தீரஜ்குமார் நியமனம்.
@ 5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: வங்க கடலில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு.
@தனியார் நிறுவனங்களில் கன்னடர்களுக்கு இடஒதுக்கீடு மசோதா: கர்நாடகா அமைச்சரவை ஒப்புதல்.
@ ஓமன் கடலில் எண்ணெய் டேங்கர் கவிழ்ந்துள்ளது. அதன் பணியாளர்கள் 16 பேர் மாயமாகி உள்ளனர். இதில் 13 பேர் இந்தியர்கள். அவர்களை தேடும் பணி தீவிரம்
@ டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் கோவை கிங்ஸ் அணி, திருச்சியை வீழ்த்தி தொடர்ந்து 4-வது வெற்றியை பதிவு செய்தது.
@ பெண்கள் டி20 கிரிக்கெட் தரவரிசை: இந்தியாவின் ஹர்மன்பிரீத், ஷபாலி வர்மா முன்னேற்றம்.
@ டி20 பேட்ஸ்மேன்கள் தரவரிசை: முதல் இடத்தில் ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட்டும், 2வது இடத்தில் இந்தியாவின் சூர்யகுமார் யாதவ்வும் உள்ளனர்.