தொடர்ந்து அவதூறு பரப்பி வந்தாக யூடியூபர் மாரிதாஸின் முகநூல் பக்கம் பேஸ்புக் நிறுவனத்தால் முடக்கப்பட்டது.
யூடியூபர் மற்றும் அரசியல் விமர்சகர் மாரிதாஸின் பேஸ்புக் பக்கம் முடக்கம் முடக்கப்பட்டது. தொடர்ந்து மதவெறியை தூண்டும் விதமாக பதிவிட்டு வந்ததால் மாரிதாஸின் ஃபேஸ்புக் பக்கத்தை முடக்கி ஃபேஸ்புக் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, பிரபல யூடியூபரான மாரிதாஸ் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பாஜக மற்றும் அதன் கூட்டணியில் இல்லாத கட்சிகளை விமர்சித்து வீடியோ வெளியிடுவார். ட்விட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் கருத்து தெரிவிப்பார். இந்த நிலையில் சமூக நல்லிணக்கத்திற்கு எதிராக தொடர்ந்து பதிவிட்டு வந்ததால் மாரிதாஸின் பேஸ்புக் பக்கம் முடக்கப்பட்டது. சமீபத்தில் யூடியூபர் மாரிதாஸ் அவதூறு வழக்கில் கைதாகி விடுதைலையானர் என்பது குறிப்பிடத்தக்கது.
அரசியல் விமர்சகர் மாரிதாஸின் பேஸ்புக் பக்கம் முடக்கம்
