• Tue. Oct 7th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

வைகை ஆற்றில் மூழ்கி தற்கொலைக்கு முயன்ற பெண்ணை காப்பாற்றிய போலீசார்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் கணவருடன் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்து பெண் வைகையாற்றில் செல்லும் வெள்ள நீரில் மூழ்கி தற்கொலைக்கு முயன்றார். ஆற்றுக்குள் இறங்கி சாமர்த்தியமாக பேசிய காவலர் பெண்ணை சமாதனம் செய்து காப்பாற்றி கணவரை கண்டித்து அவருடன் அனுப்பி வைத்த சம்பவம் பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

மானாமதுரை பிருந்தாவனம் தெருவைச் சேர்ந்தவர் ஆனந்தன் இவரது மனைவி மல்லிகா (35). கணவன் மனைவிக்கிடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்த மல்லிகா மானாமதுரையில் காவல்நிலையம் அருகே வைகை ஆற்றுக்குள் நீரில் ஆழமான பகுதிக்குச் சென்றார்.

இதைக் கவனித்த மானாமதுரை காவல் நிலைய போலீசார் பாலமுருகன், ராஜேஷ் ஆகியோர் வெள்ள நீரில் இறங்கி மல்லிகாவை சமாதானம் செய்து அவரைக் காப்பாற்றி கரைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். அதன் பின்னர் காவல் நிலையத்திற்கு கூட்டிச்சென்று மல்லிகாவிடம் தற்கொலைக்கு முயற்சி செய்யமாட்டேன் என எழுதி வாங்கிய பின் கணவர் ஆனந்தனை போலீசார் அழைத்து கண்டித்து மல்லிகாவை அவருடன் அனுப்பி வைத்தனர். வைகை ஆற்றில் இறங்கி சாதுர்யமாக செயல்பட்டு தற்கொலைக்கு முயன்ற பெண்ணை காப்பாற்றிய காவலர்களுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.