• Fri. Nov 21st, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

முபின் உறவினர் வீட்டில் போலீசார் சோதனை

ByA.Tamilselvan

Oct 26, 2022

கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் பலியான முபினின் உறவினர் வீட்டில் போலீசார் சோதனை .கார் வெடித்து பலியான முபினின் உறவினர் அப்சல்கான் (வயது 28), எலக்ட்ரீசியனாக பணியாற்றுகிறார். இவரது வீடு உக்கடம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் உள்ளது. நேற்று இரவு இவரது வீட்டுக்கு போலீசார் சென்றனர். வீட்டில் இருந்து அப்சல்கானை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இன்று காலை மீண்டும் அப்சல்கான் வீட்டுக்கு போலீசார் சென்றனர்.
அங்கு ஒரு மணி நேரத்துக்கும் மேலாக அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். வீட்டில் ஒரு லேப்-டாப்பை மட்டும் போலீசார் பறிமுதல் செய்து விசாரணைக்காக எடுத்துச் சென்றனர். அந்த லேப்-டாப் அப்சல்கானின் மகள் படிப்பதற்காக வாங்கப்பட்டது என கூறப்படுகிறது. லேப்-டாப்பில் எதுவும் தகவல்கள் உள்ளதா என்பதை ஆய்வு செய்வதற்காக போலீசார் அதனை எடுத்துச் சென்றனர்.