• Tue. Nov 18th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

முன்னாள் அமைச்சரை வீடு புகுந்து தூக்கிய போலீஸ்

Byadmin

Feb 21, 2022

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்க வந்த திமுக பிரமுகரை தாக்கிய வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு ஒரே கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் கடந்த பிப்.19ம் தேதி நடைபெற்றது. இந்நிலையில் அன்றைய தினம் சென்னை ராயபுரம் 49 வார்டில் வாக்களிக்க வந்த திமுக பிரமுகரை அதிமுகவினர் சிலர் கடுமையாக தாக்கியுள்ளனர்.

இது தொடரப்பான வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவின. இதில், திமுக பிரமுகரை சட்டையை கழட்டுமாறு ஜெயக்குமார் வற்புறுத்துவது தெளிவாக தெரிகிறது. ஆனோல் தாக்குதலுக்கு உள்ளான நபர், திமுக சார்பாக கள்ள ஓட்டு போட வந்தவர் என்று அதிமுக தரப்பில் கூறப்படுகிறது.

இந்நிலையில் பேசிக்கொண்டிருக்கும்போதே ஜெயக்குமார் முன்னிலையில் சிலர் திமுக பிரமுகரை தாக்கும் காட்சிகளும் வீடியோவில் இடம்பெற்றுள்ளன. இதன் தொடர்ச்சியாக சம்பந்தப்பட்ட திமுக பிரமுகரை அதிமுகவினர் சட்டையைக் கழற்றி அழைத்து சென்றுள்ளனர். இதனையடுத்து திமுக பிரமுகர் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. அதேபோல ஜெயக்குமார் உட்பட அதிமுகவினர் மீதும் புகார் கொடுக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் தற்போது ஜெயக்குமார் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதாவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக டிவிட்டரில் கள்ள ஓட்டு போட்ட திமுககாரங்களை பிடிச்சு கொடுத்ததற்கு என்மீதே வழக்கா..? திமுககாரர்கள் கள்ள ஓட்டு போட்டதை பார்த்த, வாக்குச்சாவடி மைய அலுவலரின் வாக்குமூலமே இதற்கு சாட்சியாக இருக்கு… இதுக்கு என்ன சொல்லப்போறீங்க முதல்வர் அவர்களே… என்று பதிவிட்டுள்ளார். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை 25 போலீசார் வீடு புகுந்து இழுத்துச் சென்றதாக அவரது மகன் ஜெயவர்தன் புகார் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.