கோவை சட்ட கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணி சார்பில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வாயிலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு விருதுநகர் மேற்கு மாவட்ட தலைவர் சரவணாதுரை தலைமை தாங்கினார். ஆர்பாட்டத்தில் மாநில மகளிர் அணி செயலாளர் ஐ. லீலாவதி பேசியதாவது ” தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை ,சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது இவர்(ஸ்டாலின்) ஏன் இன்னும் பதவியில் இருக்கிறார் பதவியை ராஜினாமா செய்து விட்டு வீட்டிற்கு செல்லுங்கள் என்று கூறினார்.

இந்த ஆர்பாட்டத்தில் பொருளாதார பிரிவு மாநில செயலாளர் Dr.முத்துராமலிங்கம், மேற்கு மாவட்ட மகளிர் அணி தலைவி பாண்டிமீனா,மேற்கு மாவட்ட பொதுசெயலாளர்கள் கோமதி முத்துகுமார், கிரி ஜனகர் தங்கராஜ், பொருளாளர் மாரி கண்ணு,மற்றும் மண்டல அணி பிரிவு தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு முன்பு ஆட்சியர் அலுவலகம் அருகே கட்சியினர்ஆர்ப்பாட்டம் நடத்த போலீசார்அனுமதி வழங்க மறுப்பு தெரிவித்தனர்.














; ?>)
; ?>)
; ?>)