• Sat. Jan 10th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

சிறுவன் கொலை வழக்கு தொடர்பாக 13 வயது சிறுவனை காவல்துறையினர் கைது செய்து விசாரணை

Byகிஷோர்

Dec 1, 2021

சிவகாசி அருகே உள்ள சித்துராஜபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சேசுதாஸ் (வயது 39). இவருடைய மகன் மைக்கேல்அஜய் (9). அரசு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்த நிலையில் கடந்த 26-ந்தேதி காலையில் வெளியே சென்ற சிறுவன் பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் பல இடங்களில் தேடியுள்ளனர். ஆனால் எந்த தகவலும் கிடைக்கவில்லை என்பதால் சேசுதாஸ் சிவகாசி டவுன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் சித்துராஜபுரம் பகுதியில் உள்ள ஒரு குட்டையில் இருந்து மைக்கேல் அஜய் உடல் மீட்கப்பட்டது. குளிக்க சென்ற மாணவன் தண்ணீரில் மூழ்கி இறந்ததாக முதலில் கூறப்பட்டது. பின்னர் மைக்கேல் அஜயுடன் சென்ற அதே பகுதியை சேர்ந்த 13 வயது சிறுவனிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில் அந்த சிறுவன் தனக்கு ஏதும் தெரியாது என்று கூறியதாக தெரிகிறது.

பின்னர் காவல்துறையினர் சம்பவம் நடந்த குட்டைக்கு செல்லும் வழியில் உள்ள ஒரு வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆராய்ந்தனர். அதில் மைக்கேல் அஜயுடன், 13 வயது சிறுவன் நடந்து செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தன.

இந்தநிலையில் சிவகாசி துணை காவல் கண்காணிப்பாளர் பாபுபிரசாந்த் மற்றும் அதிகாரிகள் அந்த 13 வயது சிறுவனிடம் விசாரணை நடத்தியதில், அந்த 5-ம் வகுப்பு மாணவன் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதை தொடர்ந்து சிவகாசி நகர் காவல் துறையினர், கொலை வழக்கில் 13 வயது சிறுவனை கைது செய்தனர். இது சிவகாசி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.