• Sat. Jan 10th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

போக்குவரத்துதுறை காவல் உதவி ஆய்வாளர் மகன்… டெல்லி சூப்பர் லீக் போட்டிக்கு தேர்வு..,

Byஜெ.துரை

Jul 31, 2023

ஆகஸ்ட் 16ம் தேதி டெல்லியில் நடைபெறவிருக்கும் இந்திய அளவிலான டெல்லி சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது. இந்திய போட்டியில் கலந்து கொள்ள சென்னை அணி சார்பாக தகுதி தேர்வு சென்னையில் நடைபெற்றது. இப்போட்டிக்கு பல்வேறு மாவட்டங்களை சார்ந்த சுமார் 60 பேர் கலந்து கொண்டனர்.

இந்த போட்டி இறுதி சுற்றில் 12 பேர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த இறுதி சுற்றில் சென்னை கே.கே.நகர்( R-7) காவல் நிலையத்தில் பணிபுரியும் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் ஜாகிர் உசேன் இவரது மகன் அஸ்வக் தேர்வாகியுள்ளார்.

ஆகஸ்ட் 16ம் தேதி டெல்லியில் நடைபெற இருக்கும் டெல்லி சூப்பர் லீக் போட்டியில் சென்னை அணி சார்பாக அஸ்வக் களம் இறங்க உள்ளார்.