சென்னை அரும்பாக்கத்தில் அமைந்துள்ள துவராக தாஸ் கோவர்தன் தாஸ் வைஷ்ணவா கல்லூரியில் தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் கேம்டக் இணைந்து பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புக்கான கருத்தரங்கம் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து இக்கல்லுரியில் பயிலும் இரண்டாம், மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு கடந்த 15 நாட்களாக நடைபெற்று வந்த சிறப்பு பயிற்சியை முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி கெளரவிக்கபடுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் நேச்சுரல்ஸ் நிறுவனர் குமரவேல், கல்லுரியின் செயலாளர் அசோக் குமார் முந்திரா, கல்லூரியின் முதல்வர் டாக்டர் சந்தோஷ் பாபு, கல்லூரியின் துறை தலைவர் டாக்டர் கே.அங்கயர்கன்னி கேம்டக் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் வைஷ்ணவி ஆகியோர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். மேலும், இந்நிகழ்சிக்கு இந்த துறையை சார்ந்த துணை பேராசியர்கள் மாணவ, மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.