• Thu. Oct 15th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

Byஜெ.துரை

Jul 30, 2023

பெண்களை நிர்வாணம் செய்து ஊர்வலமாக கொண்டு சென்று பாலியல் கொடுமைகளை செய்த சம்பவம் இந்தியாவையே உலுக்கி உள்ளது.

மணிப்பூரில் நடைபெற்று வரும் மனித உரிமை மீறல் மற்றும் பத்திரிகையாளர்களை அவமதிக்கும் செயல்களுக்கு நடவடிக்கைகள் எடுக்க தவறிய மத்திய அரசைக் கண்டித்து வரும் போரூர் சந்திப்பில் தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் தலைமையில் கண்டன ஆர்பாட்டம் நடை பெற்றது.

இந்த ஆர்பாட்டத்தில் தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் மாநில தலைவர் டி.எஸ்.ஆர்.சுபாஷ், ஆம் ஆத்மி கட்சியின் மாநில தலைவர் எஸ்.ஏ.என்.வசீகரன், சோஷலிஸ்ட் கட்சி சார்பில் M.தஞ்சை இளஞ்சிங்கம், அனைத்து மக்கள் அரசியல் கட்சி சார்பில் திருமதி ராஜேஸ்வரி பிரியா, தமிழ்நாடு மாணவர் இளையோர் கட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தோழர் லயோலா மணி, தமிழ்நாடு இளைஞர் கட்சி சார்பில் காமேஷ், மூத்த பத்திரிகையாளர் ஐயா தஞ்சை தமிழ்பித்தன் மற்றும் பத்திரிகையாளர் சங்கத்தின் மாநில மாவட்ட நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள் என பலர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றி ஆர்பாட்டம் நடத்தினர்.