• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

போலீசார் வாகனத்தை சேதப்படுத்திய 3 பேர் கைது

ByA.Tamilselvan

Jun 14, 2022

மதுரை திடீர்நகர் பகுதியில் புகாரின் அடிப்படையில் கைது செய்ய சென்ற போலீசார் வாகனத்தை சேதப்படுத்திய 3 பேரை திடீர் நகர் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்
மதுரை திடீர்நகர் பகுதியை சேர்ந்த விமலா என்ற பெண்ணுக்கும் அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது
இந்த நிலையில் விமலா நேற்று இரவு வீட்டின் முன்பாக நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த திடீர்நகர் சியாம் ,பாஸ்கர் , சுண்டு, முத்து ஆகிய 4 பேரும் அங்கு வந்து விமலா என்ற பெண்ணோடு தகராறில் ஈடுபட்டனர். இதில் விமலாவை மூன்று பேரும் சராமரியாக தாக்கியுள்ளனர் எனவே விமலா இதுதொடர்பாக திடீர் நகர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து போலீசார் திடீர்நகர் அவுட் போஸ்ட் பகுதியில் பதுங்கி இருந்த 4 பேரை சுற்றி வளைத்தனர். அப்போது அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த 4 பேரும் போலீஸ் வாகனங்கள் மீது சரமாரியாக கல்வீசி தாக்கினார்கள். இதில் போலீஸ் வாகனத்தின் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின.
போலீசார் வாதத்தின் மீது தாக்குதலில் ஈடுபட்டவர்களை சுற்றி வளைத்து போலீசார் அந்த இடத்திலேயே கைது செய்து திடீர்நகர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை செய்து வருகின்றனர்.இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஒருவர் போலீசாரின் பிடியில் இருந்து தப்பி சென்று விட்டதால் அவரை தேடி வருகின்றனர்
பொது இடத்தில் குற்றவாளிகளை கைது செய்தபோது போலீசார் வாகனத்தை அடித்து நொறுக்கிய சம்பவம் மதுரை மக்களிடையே மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
மதுரை மாநகரில் தினந்தோறும் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் அரங்கேறி வருவதால் உடனடியாக தக்க நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை அடக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்