• Fri. Nov 7th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

பூஜை பொருட்களை திருடிய 3 பேர் போலீசார் கைது..,

தூத்துக்குடியில் கடந்த 18.10.2025 அன்று தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிலுவைப்பட்டி பகுதியில் உள்ள ஒரு விநாயகர் கோவிலிலின் பூட்டை உடைத்து கோயிலில் உள்ள வெண்கல மணி, கோயில் குத்துவிளக்கு‌, வெண்கல தட்டு உள்ளிட்ட ரூபாய் 20,000/- மதிப்புள்ள பூஜை பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.

இதுகுறித்து கோயில் தர்மகர்த்தா புகாரின் பேரில் தாளமுத்துநகர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் தாளமுத்துநகர் பகுதியைச் சேர்ந்தவர்களான முத்துக்குமார் மகன் கருப்பசாமி (19), கருப்பசாமி மகன் பாலவிக்னேஷ் (22) மற்றும் மாரிமுத்து மகன் முகேஷ் (20) ஆகியோர் மேற்படி கோவிலின் பூட்டை உடைத்து பூஜை பொருட்களை திருடியது தெரியவந்தது.  திருட்டு கும்பல் சாமிக்கே  விபூதியால் பட்டையை போட்டு அதன் பின்னர் திருடிசென்றுள்ளார்  எனவும் எஸ்ஐ முத்துராஜ்  தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து தாளமுத்துநகர் காவல் நிலைய போலீசார் உடனடியாக மேற்படி 3 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்த வெண்கல மணி, வெண்கல தட்டு, குத்து விளக்கு போன்ற ரூபாய் 20,000/ மதிப்புள்ள பூஜை பொருட்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து தாளமுத்துநகர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.