• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

விசாரணைக் கைதி மரண வழக்கில் காவலர்கள் 2 பேர் கைது

ByA.Tamilselvan

May 7, 2022

விசாரணைக்கைதி விக்னேஷ் மரணமடைந்த வழங்கில் காவலர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடைபெற்றுவருகிறது.
சென்னையில் போலீஸ் கஸ்டடியில் இருந்த விசாரணைக் கைதி விக்னேஷ் மரணம் அடைந்தார். அவரது உடலில் காயங்கள் இருப்பதாகவும், போலீசார் அடித்து துன்புறுத்தியதன் காரணமாகவே விக்னேஷ் உயிரிழந்தார் என்றும் அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டினர்.
அதன்பின் விக்னேசின் மரணம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டது. அவரது குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரண உதவியையும் அளித்து உத்தரவிட்டது. தற்போது நடைபெற்று வரும் சட்டசபையில் இந்த விவகாரம் விவாதிக்கப்பட்டது.நேர்மையான முறையில் விசாரணை நடைபெற வேண்டுமானால் இந்த வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
இதையடுத்து, இந்த வழக்கு பற்றி விளக்கம் அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விக்னேஷ் மரணம் விவகாரத்தில் சட்டப்படி அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. பிரேத பரிசோதனை அடிப்படையில் கொலை வழக்காக மாற்றப்பட்டு விசாரணை நடக்கிறது என தெரிவித்தார். இந்நிலையில், சென்னையில் விசாரணை கைதி விக்னேஷ் கொலை வழக்கில் காவலர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். தலைமைச் செயலக காலனி நிலைய எழுத்தர் முனாஃப் மற்றும் காவலர் பவுன்ராஜ் ஆகியோரை கைதுசெய்து விசாரித்து வருகின்றனர்.