• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீசார் நடவடிக்கை

பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பாதிரியார் மீதான வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக சைபர் கிரைம் போலீசார் தெரிவித்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு பகுதியை சேர்ந்த பெனடிக்ட் ஆன்றோ பாதிரியாராக பல்வேறு தேவாலயங்களில் செயல்பட்டு வந்தார். இந்நிலையில் தேவாலயங்களுக்கு வரும் இளம் பெண்களுடன் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவியது.
இந்த நிலையில் பேச்சிபாறையைச் சேர்ந்த ஒரு நர்சிங் மாணவி பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ மீது புகார் அளித்தார். அந்த புகாரில் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறியிருந்தார்.அதன்படி பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ மீது 5 பிரிவுகளின் கீழ் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் தலைமறைவாக இருந்த அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.மேலும் அவரது செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. இதற்கிடையே மற்றொரு பெண்ணும் இவர் பாலியல் தொல்லை அளித்ததாக புகார் அளித்தார்.இவ்வழக்குகள் தொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்காக இரண்டு முறை பாதிரியாரை தலா ஒரு நாள் போலீஸ் காவலில் எடுத்தனர்.விசாரணைக்கு பின்பு பாதிரியார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டதை தொடர்ந்து மீண்டும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார் அதை ஒட்டி மீண்டும் பாதிரியார் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.போலீஸ் காவலில்இ வைக்கப்பட்டிருந்தபோது அவரிடம் விசாரணையை தொடர்ந்து அவரது மேலும் ஒரு செல்போனை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த செல்போனைத்தான் போலீசார் தேடி வந்ததாக கூறப்படுகிறது.பறிமுதல் செய்யப்பட்ட செல்போனை போலீசார் ஆய்வு செய்ததில் புதிதாக தடயங்கள் எதுவும் சிக்கவில்லை என்று கூறப்படுகிறது. தொடர்ந்து போலீசார் அந்த செல்போனை ஆய்வு செய்து வருகிறார்கள்.இன்னும் ஒரு வார காலத்தில் பாதிரியார் மீதான வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக சைபர் கிரைம் போலீசார் தெரிவித்தனர்.