குரோம்பேட்டையில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் கழக இலக்கி அணி கவிதை நூல் வெளியீட்டு விழாவில் மதிமுக பொதுசெயலாளர் வை.கோ கலந்து கொண்டு கவிதை நூலை வெளியீட்டார்.
சென்னை அடுத்த குரோம்பேட்டை தனியார் மண்டபத்தில் மதிமுக கழக இலக்கிய அணி நடத்தும் அரசியலில் அறம் அகவை அறுபது நூல் வெளியீட்டு விழா கழக இலக்கிய அணி செயலாளர் காரை எஸ்.செல்வராஜ் தலைமையில் மாவட்ட செயலாளர் மாவை.மகேந்திரன் முன்னிலையில் நடைபெற்றது.
நூல் வெளியீட்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினர் திராவிட கழக தலைவர் ஆசிரியர் கீ.வீரமணி, மதிமுக பொதுசெயலாளர் வைகோ, பெருக்கவிக்கோ சேதுராமன், சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி, பல்லாவரம். மண்டல குழுத் தலைவர் ஜோசப் அண்ணாதுரை, ம.ம.க. துணை பொதுச்செயலாளர் தாம்பரம் யாக்கூப், மாவட்ட தலைவர் முத்தையன் ஆகியோர் கலந்து கொண்டு கீ.வீர்மணி, வைகோ அவர்களுக்கு மலர்மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
இதனை தொடந்து தழிழ்ச் சங்கங்களுக்கு விருதுகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். இதில் ஏராளமான கவிஞர்கள், அறிஞர்கள், ஆசிரியர்கள் மற்றும் மதிமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஏராளமனோர் கலந்து கொண்டனர்.








