• Fri. Nov 21st, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

சிவகாசி அருகே, சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது போக்சோ வழக்கு…..

ByKalamegam Viswanathan

Dec 11, 2023

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள நாரணாபுரத்தில் பட்டாசு ஆலை உள்ளது. இந்த பட்டாசு ஆலையில், தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகேயுள்ள சூரியநாராயணபுரம் பகுதியைச் சேர்ந்த முகேஷ்குமார் (20) என்பவர் வேலை பார்த்து வருகிறார். போஸ் காலனி பகுதியில் தங்கி வேலைக்கு சென்று வந்த இவர், அதே பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமியுடன் நெருங்கி பழகியுள்ளார். சில மாதங்களுக்கு முன்பு முகேஷ்குமார், அந்த சிறுமியை உத்தமபாளையத்திற்கு அழைத்துச் சென்று திருமணம் முடித்துள்ளார். முகேஷ்குமாரும், திருமணம் முடிந்த சிறுமியும், சிவகாசியில் தனியாக வசித்து வந்தனர். இந்த நிலையில் சிறுமி கர்ப்பமடைந்தார். சிறுமி கர்ப்பமானது குறித்து அவரது தாயார், சிவகாசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். சிறுமியை திருமணம் செய்து, கர்ப்பமாக்கிய வாலிபர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குபதிவு செய்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்