• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

உ.பி.யில் ‘நமோ பாரத்’ ரயிலை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்..!

Byவிஷா

Oct 20, 2023

இந்தியாவின் முதல் பிராந்திய அதிவேக ட்ரான்சிட் ”நமோ பாரத்” ரயிலை பிரதமர் நரேந்திர மோடி உத்தரபிரதேசத்தில் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
உத்தரபிரதேசத்தின் சாஹிபாபாத் ரேபிட்எக்ஸ் நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இதை தொடர்ந்து, அந்த ரயிலில் பிரதமர் மோடி பயணித்தார். அப்போது பள்ளி மாணவர்கள் உள்பட ரயிலில் பயணித்தவர்களிடம் அவர் கலந்துரையாடினார். பிரதமர் மோடியால் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ள பிராந்திய விரைவு போக்குவரத்து சேவையான, அதிவேக மெட்ரோ ரயில்களுக்கு ‘நமோ பாரத்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த தொடக்க விழாவில் உத்ரபிரேதேச மாநில முதலமைச்சர் பங்கேற்றுள்ளார். ”நமோ பாரத்” ரயில் மணிக்கு 180 கி.மீ., வேகம் செல்லும் அதிவேக மெட்ரோ ரயில் சேவையாகும்.
இந்திய ரயில்வே முன்னெடுத்துள்ள ஒரு முக்கியமான திட்டம் RRTS – Regional Rapid Transit System குறுகிய தொலைவு கொண்ட இரு நகரங்களை இணைப்பதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் முதல் ரயில் இன்று சாஹிபாபாத் மற்றும் துஹாய் டிப்போ இடையே இயக்கப்படுகிறது.
டெல்லி-காசியாபாத்-மீரட் பிராந்திய விரைவு போக்குவரத்து அமைப்பு (ஆர்ஆர்டிஎஸ்) வழித்தடத்தின் இயக்கப்படுகிறது. நாட்டின் முதல் பிராந்திய விரைவு போக்குவரத்து அமைப்பான நமோ பாரத் ரயில் சேவை, என்.சி.ஆர்., எனப்படும் தேசிய தலைநகர் பகுதிகள் முழுதும் உள்ளடக்கும் வகையில் இயக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.