சத்தியமங்கலம் அருகே உள்ளபுஞ்சை புளியம்பட்டி ஆதிபராசக்தி கோவில் அருகே உள்ள தனியார் நூற்பாலை உள்ளது. இந்த நூற்பாலை கடந்த சில வருடங்களாக செயல்படாமால் உள்ளது.
இந்நிலையில் நூற்பாலை குடோனில் சீட்டாட்டம் நடைபெறுவதாக புஞ்சை புளியம்பட்டி போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில் சப்இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது புஞ்சை புளியம்பட்டியை சேர்ந்த இம்தியாஸ், தனசேகர், அமீர்ஜான், தேவராஜ், கண்ணன், கோகுல, ராஜேஸ்குமார், சசிக்குமார் மற்றும் சீட்டாட்டம் ஆட அனுமதி அளித்த மில்லின் செக்யூரிட்டி பிரகாஷ் உள்ளிட்ட 9 நபர்கள் மீது வழக்குபதிவு செய்து கைது செய்தனர். மேலும் போலீசார் அவர்களிடம் இருந்து பணம் ரூ 1 லட்சத்து 2 ஆயிரம், செல்போன் 10, பைக் 4 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
நூற்பாலை குடோனில் சீட்டாட்டம்
9பேர் மீது வழக்குப்பதிவு
