தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு ஒன்றியத்துக்குப் பட்ட திருமங்கலக்கோட்டை கீழையூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் உலக மாசு கட்டுப்பாட்டு தினம் மற்றும் உலக மண்வளம் தினத்தை முன்னிட்டுசுற்றுச்சூழல் விழிப்புணர்வு உறுதிமொழி நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் இயற்கை வரலாற்று சங்கத்தினுடைய பறவைகள் விஞ்ஞானி உதவி இயக்குனர் டாக்டர் எஸ் சிவக்குமார் பள்ளி மாணவ மாணவிகளுக்கு பறவைகளால் ஏற்படும் நன்மைகள் குறித்து எடுத்துரைத்தார் அதன் பிறகு நெகிழிஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு உறுதிமொழி மாணவர்கள் ஆசிரியர்கள் எடுத்துக்கொண்டனர்.

அனைத்து மாணவர்கள் ஆசிரியர்கள் அனைவருக்கும் மஞ்சப்பை வழங்கப்பட்டது இதில் ஏராளமான மாணவிகள் சமூக ஆர்வலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.




