• Sat. Oct 11th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு 100 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

ByA.Tamilselvan

Mar 23, 2023

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உலக வனநாள், உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு திருமங்கலம் நகராட்சி, சித்தர்கூடம்திருமங்கலம் களப்பணி நண்பர்கள் குழு இணைந்து 100 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மார்ச் 21 ,உலக வனநாள் மார்ச் 22 உலக தண்ணீர் தினம் முன்னிட்டு மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சி, சித்தர்கூடம்திருமங்கலம் களப்பணி நண்பர்கள் குழு இணைந்து பாரம்பரிய மரக்கன்றுகள் நடும் களப்பணி நகராட்சி கசடு கழிவு மேலாண்மை வளாகத்தில் நடைபெற்றது.

பசுமைகளப்பணியினை திருமங்கலம் நகர சேர்மன் ரம்யா முத்துக்குமார் நகராட்சி ஆணையாளர் தலைமை தாங்கி துவக்கிவைத்தார் .நகர வார்டு கவுன்சிலர்கள் .சின்னச்சாமி .வீரக்குமார் ,நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் ,.சரவணபிரபு .ஜெயசீலன் மற்றும் சுகாதார மேற்பார்வையாளர்கள்,தூய்மை இந்தியா மேற்பார்வையாளர்கள், நகராட்சி பணியாளர்கள்,சித்தர்கூடம் திருமங்கலம் களப்பணி நண்பர்கள், இயற்கை ஆர்வலர் விளாச்சேரி சதீசுகுமார் ஆகியோர் கலந்துக்கொண்டு 1) ஆலமரம்,2) அரசமரம்,3) வேம்பு ,4) புங்கன்,5) புளியமரம்,6) முள்முருங்கை,7) இலுப்பை .8) மருதமரம், 9) ஆவி ,10) முருங்கை ,11) வாதாம்,12) பூவரசு…. ஆகிய 100 மரக்கன்றுகள் நடப்பட்டது.