டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஒடிடி தளத்தில் 24 மணி நேரம் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வனிதா, கடந்த வாரம் சிம்பு ஹோஸ்ட்டாக வருவதற்கு முன்பாகவே வீட்டை விட்டு வெளியேறினார்.
இந்நிலையில், பிக் பாஸ் வீடு குறித்தும், நிகழ்ச்சி குறித்தும் பல செய்திகளை பகிர்ந்து வருகிறார் வனிதா..
ஒருவழியாக பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிவிட்டேன், இப்போதான் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறேன். ஏகப்பட்ட பிரச்சனைகள் அந்த வீட்டில் இருக்கின்றன. லைவ் என்று சொல்கிறார்கள் ஆனால், நான் பேசிய பல வார்த்தைகளை எடிட் செய்துள்ளனர். இதற்கு ஏன் லைவ் என்று போட வேண்டும் என வரிசையாக ஏகப்பட்ட ட்வீட்களை போட்டு வெளுத்து வாங்கி உள்ளார்.
பிக் பாஸ் வீடு ரொம்பவே இரிடேட்டான இடம் என்று ட்வீட் போட்டிருக்கும் வனிதா விஜயகுமார், அந்த வீட்டில் இருந்து வெளியேறி இத்தனை நாட்கள் ஆன பின்னரும் ஒரே நைட்மேராகவே உள்ளது. இதில், இருந்து எப்பத் தான் சகஜ நிலைக்கு திரும்புவேன் என்றே தெரியவில்லை என வனிதா விஜயகுமார் பிக் பாஸ் வீடு உளவியல் ரீதியாக போட்டியாளர்களுக்கு ஒரு நரகம் போல இருப்பதை சுட்டிக்காட்டியிருக்கிறார்.
மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சி அதன் என்டர்டெயின்மென்ட் தன்மையையே இழந்து விட்டதாகவும் போட்டியாளர்கள் மென்டல் டார்ச்சர்களை உள்ளே அனுபவிக்கின்றனர் என்றும் வனிதா விஜயகுமார் கூறியுள்ளார். சீக்கிரமே வெளிநாட்டுக்கு சென்று ஓய்வெடுத்து மன நிம்மதியை தேடப் போகிறேன் என்றும் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
பிக் பாஸ் அல்டிமேட்டின் தரம் முற்றிலும் குறைந்து விட்டதாலே அதிலிருந்து கமல் வெளியேறினாரா? என்கிற கேள்வியையும் ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். இதுபோன்ற குற்றச்சாட்டுக்களை வனிதா விஜயகுமார் இதற்கு முன்பு சொல்லாத நிலையில், இப்ப மட்டும் சொல்ல என்ன காரணம் என்றும், மற்ற சீசன்கள் எல்லாம் 24 மணி நேரமும் லைவாக நடக்காதோ? என்கிற சந்தேகங்களும் வனிதா விஜயகுமாரின் இந்த ட்வீட்கள் மூலம் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.