• Fri. Apr 26th, 2024

பிங்க் நிற அதிசய மீன்..ஆராய்ச்சியாளர்கள் சாதனை..

Byகாயத்ரி

Dec 26, 2021

பிங்க் நிற நடக்கும் மீனை கடல் ஆராய்ச்சியாளர்கள் 22 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கண்டறிந்துள்ளனர்.

ஆஸ்திரேலியாவில் இருக்கும் டாஸ்மானியா தீவின் கடற்கரையில் மிக அரிய வகையான மீன்கள் குறித்து ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தனர். இந்த ஆராய்ச்சியில் ‘நடக்கும் மீன்’ 22 ஆண்டுகளுக்கு பின் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. காமன்வெல்த் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி நிறுவனம்(சி எஸ் ஐ ஆர் ஓ) இந்த அழிந்து வரும் மீன் இனத்தை கண்டதாக தெரிவித்துள்ளனர்.இந்த பிங்க் நிற மீன், முதன்முதலாக 1999ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.ஒரு காலத்தில் அதிக அளவில் கடற்கரைகளில் தென்பட்ட இந்த மீன் இனம், பிற்காலத்தில் டெர்வெண்ட் கடற்கரை முகத்துவாரங்களில் மட்டும் தென்படும் வண்ணம் அதன் இனம் குறைந்து போனது.

2012ம் ஆண்டு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பல்லுயிர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இந்த மீன் இனம் ஆபத்தான நிலையில் உள்ள அழிந்து வரும் உயிரினங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டது. அதன்பின் எடுக்கப்பட்ட பாதுகாப்பு முயற்சிகளால் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு பின் இப்போது டாஸ்மானிய கடற்கரை பகுதிகளில் இந்த மீன்கள் தென்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *