• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

அதிபர் மாளிகையை அதிரடியாக கைப்பற்றிய மக்கள் படங்கள் …

ByA.Tamilselvan

Jul 9, 2022
   இலங்கையில் அதிபர் மாளிகையை விட்டு கோத்தபய ராஜபக்சே தப்பி ஓடிய நிலையில் பொதுமக்கள் அதிபர் மாளிகையை கைப்பற்றியுள்ளனர்

இலங்கையில் மிண்டும் போராட்டம் துவங்கியுள்ள நிலையில் நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு விடப்பட்டது
ராஜபக்சேக்களை பதவி விலகக்கோரி ஏற்கனவே போராட்டம் நடந்தது. இந்நிலையில் மகிந்தா ராஜபக்சே பதவி விலகினார். அருக்கு பதிலாக ரணில் விக்ரமசிங்கே பிரதமராக பதவியேற்றார்.

தப்பி ஓடும் கோத்தபய ராஜபக்சே

பொருளாதார நெருக்கடி தீர இன்னும் 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகலாம் என ரணில் அறிவித்தார். பொருளாதார நெருக்கடிக்கு உடனடியாக தீர்வு காணவேண்டும்,இல்லையானல் பதவி விலக வேண்டும் என மக்கள் கோத்தபய ராஜபக்சே,ரணில்விக்ரமசிங்கே ஆகியோர் பதவி விலக வலியுறுத்தி வருகின்றனர்.


இந்நிலையில் இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு எதிராக போராடி வரும் சாமானிய மக்கள் அலைகடலென திரண்டு அதிபர் மாளிகையை கைப்பற்றியுள்ளனர்..அங்கிருந்து கோத்தபய ராஜபக்சே தப்பி ஓடிய நிலையில் மக்கள் அங்கிருக்கும் அதிபர் இருக்கையில் அமர்ந்தும்,நீச்சல் குளங்களில் குதித்தும் விளையாடியும் புகைப்படங்கள், வீடியோக்கள் உள்ளிட்டவற்றை எடுத்து பகிர்ந்து வருகின்றனர்.