• Sat. Apr 11th, 2026
WhatsAppImage2026-04-10at0716401
previous arrow
next arrow
Read Now

பெட்ரோல் விலை 5 சதவீதம் மட்டுமே உயர்வு-அமைச்சர் தகவல்

Byகாயத்ரி

Mar 14, 2022

உக்ரைன் – ரஷ்யா நாடுகளின் போர் காரணமாக உலகம் முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கணிசமாக உயர்ந்து வரும் நிலையில் இந்தியாவில் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக பெட்ரோல் விலை உயரவில்லை.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதால் இலங்கை, அமெரிக்கா பிரிட்டன் உட்பட பல்வேறு நாடுகளில் பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது. ஆனால், இந்தியாவில் மட்டும் பெட்ரோல் விலை கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக உயரவில்லை. இதுகுறித்து, மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி நாடாளுமன்றத்தில் பேசுகையில், “அமெரிக்கா, பிரிட்டன், இலங்கை உள்ளிட்ட நாடுகள் பெட்ரோல் விலையை உயர்த்திய போதும், இந்தியா உயர்த்தவில்லை. மற்ற நாடுகள் பெட்ரோல் விலையை 50 சதவீதத்துக்கு மேல் உயர்த்திய போதும், இந்தியாவில் 5 சதவீதம் மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.