சென்னையில் பெட்ரோல் விலை நேற்று லிட்டருக்கு 31 பைசா அதிகரித்து ரூ.104.83 ஆகவும் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 33 பைசா உயர்ந்து ரூ.100.92 ஆகவும் விற்பனையானது.
இந்நிலையில் பெட்ரோல் விலை இன்று லிட்டர் ஒன்றுக்கு 30 பைசா அதிகரித்து ரூ.105.13க்கும் மற்றும் டீசல் விலை 33 பைசா உயர்ந்து ரூ.101.25க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வு இன்று காலை முதல் அமலுக்கு வந்தது. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது பொதுமக்களுக்கு கடும் அதிர்ச்சியை அளித்துள்ளது.