
குப்பையில் கொட்டும் உணவு பொருட்களை பெயர் தயாரிப்பு தேதி காலாவதி ஆகும் தேதி உள்ளிட்ட எந்தவித தகவலும் இல்லாமல் குப்பையைப் போன்று விற்பனை செய்யும் தனியார் பேக்கரி நிறுவனம் உடல் உபாதை ஏற்படுவதாக குற்றச்சாட்டு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க பொதுமக்களும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் திருநகரை அடுத்துள்ள முல்லை நகர் பகுதியில் செயல்பட்டு வரும் பிருந்தா ஸ்னாக்ஸ் என்னும் பேக்கரி செயல்பட்டு வருகிறது. இதில் இருக்கக்கூடிய பொருட்கள் தரமற்றதாகவும் பெயர்கள் இல்லாமல் தயாரிப்பு தேதி காலாவதி தேதி ஏதும் இல்லாமல் குப்பைகள் கொட்டக்கூடிய பொருட்களை மொத்தமாக அனைத்தும் ஒரு கலவையாக கலந்து வாடிக்கையாளர்களுக்கு பத்து ரூபாய் என விற்பனை செய்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இதை வாங்கி சாப்பிடும் குழந்தைகள் முதல் பெரியவர் வரை உடல் உபாதைகளும் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இவர்கள் தயாரிக்கும் பொருட்கள் தரமற்ற முறையில் இருப்பதாகவும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளிடம் பலமுறை சொல்லி நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் குற்றச்சாட்டும் இழந்துள்ளது இதனால் சம்பந்தப்பட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கடை மீது ஆய்வு மேற்கொண்டு தயாரிக்க கூடிய பொருட்கள் மற்றும் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை சோதனை செய்து தவறு இருக்கும் பட்சத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைவருடைய எதிர்பார்ப்பாக உள்ளது. நடவடிக்கை எடுப்பார்களா உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எதிர்பார்ப்புடன் சமூக ஆர்வலர்கள்.
