தமிழக அரசின் மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியரிடம் மின்சார கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தனர். இதன் ஒரு பகுதியாக மதுரையில் மதுரை மாநகர் மாவட்டம் சார்பாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் கே ஆர் ராஜேந்திரன் மற்றும் தலைவர் ராஜாங்கம் தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதில் திமுக அரசு ஆட்சி பொறுப்பு ஏற்றதில் இருந்து மக்கள் மீது பெரும் சுமையாக பல்வேறு வரிகளை உயர்த்தி இருக்கிறது குறிப்பாக பால் கட்டண உயர்வு, வீட்டு வரி உயர்வு, சொத்து வரி, பத்திரப்பதிவு கட்டின உயர்வு, குடிநீர் கட்டண உயர்வு என உயர்த்தி மூன்று ஆண்டுகளாக மக்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தி வருவதாகவும், இந்த சூழ்நிலையில் தற்போது மின்சார கட்டணம் உயர்வால் ஏழை எளிய நடுத்தர மக்கள் மற்றும் சிறுகுரு வியாபாரிகள் தொழில் நிறுவனத்தைச் சார்ந்தவர்கள் பலரும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாகவும், எனவே தமிழக அரசு மின்சார கட்டண உயர்வை உடனே திரும்ப பெற வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தனர். மேலும் அரசு இந்த கோரிக்கையை பரிசீலனை செய்யாவிட்டால் தமிழக அளவிலான பெரும் போராட்டத்தை நடத்த இருப்பதாகவும் தெரிவித்தனர்.