• Thu. Nov 20th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

இடிக்கப்பட்ட கள்ளர் சீரமைப்பு பள்ளியை கட்டித்தர வேண்டி கலெக்டரிடம் மனு

Byp Kumar

May 29, 2023

பூதிப்புரம் கள்ளர் சீரமைப்பு பள்ளியை இடித்து விட்டு கள்ளர் சீரமைப்பு பள்ளிக்கு சொந்தமான இடத்தை முறைகேடாக ஆக்கிரமிப்பு செய்து. அந்த இடத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டபோவதாக முயற்சித்து கட்டிட வேலை செய்து வருவதை தடுத்து நிறுத்தி. மீண்டும் பள்ளி கட்டித்தர வேண்டி ஊர் பொதுமக்கள் சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்


மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டம், பூதிப்புரம், அரசு கள்ளர் தொடக்கபள்ளி கட்டிடத்தை எந்தவித முன் அனுமதியின்றி இடித்துவிட்டு மேற்படி இடத்தில் ஊராட்சிமன்ற தலைவர் மற்றும் துணைத் தலைவர் இணைந்து பள்ளி கட்டிடத்தை இடித்து, புதிய வேறு கட்டிடம் கட்டி வருவதை தடுத்து நிறுத்தி, அந்த இடத்தில் மாணவர்கள் பயன்பெறும் வகையில் அரசு கள்ளர் பள்ளி கட்டிடத்தை மீண்டும் கட்டி தந்திடவும் மேலும் இது சம்மந்தமாக மேற்படி கள்ளர் சீரமைப்பு இணை இயக்குநர் அவர்களிடம் மனுக்கொடுத்ததில் மேற்படி மனுவானது ஊராட்சிமன்ற தலைவர் அவர்கள் மேற்படி இடத்தில் வேறு ஏதும் கட்டிடங்கள் கட்டக்கூடாது என்று உத்தரவிட்ட பிறகும், அந்த உத்தரவை மதிக்காமல் தொடர்ந்து கட்டுமானப் பணி செய்து வரும் மேற்படி ஊராட்சிமன்ற தலைவர் மற்றும் துணைத் தலைவர் மீது தகுந்த சட்ட நடவடிக்கை எடுத்து கள்ளர் பள்ளி இடத்தை மீட்டு, மீண்டும் கள்ளர் பள்ளி அமைத்து கொடுத்து மாணவர்களின் படிப்பிற்கு உதவுமாறு ஜெயக்குமார்தேவர்,அம்மாசித்தேவர் கம்பதாசன், ஜெயக்கொடி, அய்யாவு,ஜெயச்சந்திரன் மற்றும் பொதுமக்கள் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளித்தனர்