திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் கேட்டு த.வெ.க.வினர் மனு அளித்தனர். இது குறித்து திண்டுக்கல் த.வெ.க. கிழக்கு மாவட்ட செயலாளர் தர்மராஜ், கலெக்டர் சரவணனிடம் மனு அளித்து கூறியதாவது:

திண்டுக்கல் மாவட்டத்தில் ஏழு சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் எந்த தொகுதிக்கும் த.வெ.க.,வுக்கு வாக்காளர் பட்டியல் அளிக்கப்படவில்லை. மற்ற கட்சிகளுக்கு வாக்காளர் பட்டியல் அளிக்கப்பட்டுள்ளது.
நாங்களும் மக்களுக்காகத்தான் போராடுகிறோம். அனைத்து போராட்டங்களும் நடத்தி வருகிறோம்.

மற்ற அரசியல் கட்சிகளுக்கு அளிப்பது போல எங்களுக்கும் வாக்காளர் சிறப்பு திருத்த முகாமுக்கு பின்புள்ள வாக்காளர் பட்டியலை அளிக்க வேண்டும். இவ்வாறு கோரிக்கை வைத்தனர். இதற்கு கலெக்டர் சரவணன் கூறியதாவது: உங்கள் கோரிக்கை பரிசீலிக்கப்படுகிறது. உங்கள் மனுவை மாநில தேர்தல் அதிகாரிக்கு அனுப்பி வைத்து அவர்களிடம் கருத்து கேட்ட பின்பு உங்களுக்கு வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும், என்றார்.







