• Wed. Dec 3rd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு மனு

ByM.maniraj

Sep 12, 2022

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தூத்துக்குடி வடக்கு மாவட்டம் சார்பில் வீடு இல்லாதவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா கேட்டு மனு அளிக்கப்பட்டது.
கோவில்பட்டியில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தூத்துக்குடி வடக்கு மாவட்டம் சார்பில் மாவட்ட செயலாளர் எஸ். ஆர். பாஸ்கரன் தலைமையில் வீடு இல்லாதவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா கேட்டு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. இதில் நிகழ்ச்சியில் லிங்கம்பட்டி சமத்துவபுரம் ஒன்றிய செயலாளர் சின்னத்தம்பி முன்னிலையில் லிங்கம்பட்டி கிளைச் செயலாளர் தங்கராஜ், கடலையூர் கிளை செயலாளர் முத்துகிருஷ்ணன், ஒன்றிய துணை செயலாளர், கோவில்பட்டி நகரச் செயலாளர் அய்யாத்துரைபாண்டியன், ஒன்றிய மாணவரணி துணைச் செயலாளர் தங்கமுத்து, லிங்கம்பட்டி கிளை துணைச்செயலாளர் லாசர், கிளை பொருளாளர் முருகன், கடலையூர் கிளை துணைச் செயலாளர் முத்து கனி மற்றும் பட்டா கேட்டு விண்ணப்பித்த பொது மக்கள், சமத்துவ மக்கள் கட்சி நிர்வாகிகளுடன் திரளாக கலந்து கொண்டு மனு அளிக்கப்பட்டது.