• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாணத்துக்கு மனு

ByKalamegam Viswanathan

Feb 14, 2025

திருப்பரங்குன்றம் சுப்ரமணியசாமி திருக்கோயில் கந்தன் மலையின் புனிதத்தை பாதுகாக்கும் விதமாக குரல் கொடுக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சி சார்பாக ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாணத்துக்கு மனு அளிக்கப்பட்டது.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலை தொடர்பாக சர்ச்சை எழுந்து வரும் நிலையில் திருப்பரங்குன்றம் கந்தன் மலையின் புனிதத்தை பாதுகாக்க விதமாக தங்கள் குரல் கொடுக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சி சார்பாக மாவட்டத் தலைவர் சோலை கண்ணன் கோரிக்கை வைக்கப்பட்டது.

உலகப்பெற்ற புண்ணிய ஸ்தலமான கோவிலில் கொடிக்கணக்கான பக்தர்கள் தினம் தரும் வழிபட்டு வருகின்றனர் மலைமீது காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கு பல வருடமாக கோவில் சார்பாக பழனி ஆண்டவர் கோயில் வழியாக வேல் எடுத்து செல்கின்றனர்.

அதை சீரழிக்கும் வகையாக தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான எஸ் டி பி ஐ நிர்வாகிகள் திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள சிக்கந்தர் தர்காவையும் அதனுடன் பெரியத வீதியில் உள்ள சிக்கந்தர் பள்ளிவாசலையும் ஊடுருவி நிர்வாகம் செய்து வருகிறது .

கடந்த சில நாட்களாக திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என்றும் மலை முழுவதும் முஸ்லிம்களுக்கு சொந்தமானது என்றும் மலை மீது ஆடு,மாடு தோழிகள் பலி கொடுப்போம் என்றும் சர்ச்சையை உண்டாக்கி இந்து முஸ்லிம் ஒற்றுமை சீர்களுக்கும் விதமாக மோதலை தூண்டும் வகையில் பள்ளி ஜமாத் நிர்வாகம் என்ற போர்வையில் எஸ்டிபிஐ கட்சியினர் தற்போது மலை மீது எங்களுக்கு வழிபாடு உரிமையை பறிக்கப்படுகிறது என்றும் ஒரு தவறான குற்றச்சாட்டை முன்வைத்து போராட்டம் என்ற பெயரில் திருப்பரங்குன்றத்தில் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் மிகப்பெரிய மத கலவரத்தை உண்டாக்கும் எஸ்டிபிஐ மற்றும் அதன் கூட்டணி திட்டமிட்டு செய்து வருகிறது.

எனவே சனாதன தர்மத்திற்கு ஆதரவாக குரல் கொடுக்கும் தற்போது முருக பெருமானின் அறுபடைவீடுகளில் தரிசிக்க வரும் சனாதன விரோதிகளுக்கு சிம்ம சொற்பனமாக திகழும் நீங்கள் முருகன் கோவில் புனித மலையை பாதுகாக்க ஆதரவாக குரல் கொடுக்க வேண்டும் என திருப்பரங்குன்றம் மலை பாதுகாப்பு இயக்கம் ஒட்டுமொத்த இந்து சமய பக்தர்கள் சார்பாக கேட்டுக் கொள்ளப்பட்டது..