• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

மு.க.ஸ்டாலினுக்கு பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் நன்றி…

Byகாயத்ரி

Dec 24, 2021

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் நன்றி தெரிவித்துள்ளார்.

அண்ணாவின் 113வது பிறந்தநாளை முன்னிட்டு ஆயுள் கைதிகளை விடுதலை செய்ய வழிமுறைகளை வகுத்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 10, 20 ஆண்டுகள் தண்டனை அனுபவித்தும் இந்த அறிவிப்பின் கீழ் பயன்பெற முடியாத ஆயுள் கைதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஆயுள் கைதிகளின் முன்விடுதலை குறித்து ஆராய ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஆறு பேர் அடங்கிய குழுவையும் முதலமைச்சர் அமைத்துள்ளார்.

இந்நிலையில், ஆயுள் சிறைவாசிகள் முன்விடுதலை தொடர்பாக முதலமைச்சரின் அறிவிப்புக்கு, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் நன்றி தெரிவித்துக்கொண்டார்.முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள், மகனை விடுவிக்க பல்வேறு சட்ட போராட்டங்களை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் அவர் முதலமைச்சருக்கு திறந்த கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில், ஆயுள் சிறைவாசிகள் முன்விடுதலை தொடர்பாக முதல்வரின் அறிவிப்பு தமிழக வரலாற்றில் ஒரு மைல் கல் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.


சிறை கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வதற்காக நீதியரசர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவின் தன்மையே முதல்வரின் மனித நேய நோக்கத்தை வெளிப்படுத்துகிறது.

31 ஆண்டாக சிறைவாசிகளின் துன்பம் பற்றி நன்கு தெரியும் என்பதால் முதல்வருக்கு அன்பு கலந்த நன்றி என்றும் அற்புதம்மாள் கூறியுள்ளார்.