

கன்னியாகுமரி மாவட்டம் குமரி-கேரளா எல்லை படந்தாலமூடு காவல் சோதனை சாவடியில் அதிகாலையில் திடீர் ஆய்வு மேற்கொண்ட சார் ஆட்சியர் கௌஷிக் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அந்த வழியாக அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக பாரத்துடன் விதிகளை மீறி கனிம வளங்களை ஏற்றி கேரளாவிற்கு செல்ல முயன்ற 6-டாறஸ் லாரிகளை பறிமுதல் செய்ததோடு வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க களியக்காவிளை காவல் நிலையத்தில் புகாரளித்த நிலையில், லாரி உரிமையாளர் மற்றும் டிரைவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
