• Tue. Apr 23rd, 2024

65 வயதிற்குட்பட்டவர்களும் இந்த வேலைக்கு விண்ணபிக்கலாம்

ByA.Tamilselvan

Jun 6, 2022

EPFO(emploees provident fund organisation ) நிறுவனம் காலியாக உள்ள பல்வேறு பணிகளுக்கு காலிப்பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் கீழ்காணும் விவரங்களை படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் https://www.epfindia.gov.in/site_en/index.php என்ற இணையதள பக்கத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும். இந்த நிறுனத்தில் programmer பணிக்கான காலிப்பணியிடங்கள் உள்ளன.இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஜூன் 30 கடைசி தேதியாகும்.
இந்த பணிக்கு மாத சம்பளமாக ரூ.47,600.00-1,51,100.00/- வரை கிடைக்கும். B.E , B.Tech படித்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதி உடையவர்கள்.இந்த நிறுவனத்திற்கு டெல்லியில் தலைமை அலுவலகம் இருப்பதால் அங்கு பணி கிடைக்கும். 65 வயதிற்குட்பட்டவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கத் தகுதி உடையவர்கள். இப்பணிக்கு 65 காலிப்பணியிடங்கள் உள்ளன . விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும். எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் (Interview/written test) முறையில் விண்ணப்பிக்கும் நபர்கள் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பிக்க கட்டணம் எதுவும் கிடையாது.
விண்ணப்ப படிவத்தை அனுப்ப வேண்டிய முகவரி :Sh. Suraj Sharma, Regional Provident Fund Commissioner-I (HRM), Bhavishya Nidhi Bhawan, 14 Bhikaiji Cama Place, New Delhi 110066
இந்த பணி குறித்து தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ இணையதள முகவரி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
https://www.epfindia.gov.in/site_docs/PDFs/Recruitments_PDFs/HRM10_DepuVac_Prog_8016.pdf
இந்த லிங்கை க்ளிக் செய்யவும்

இந்தபணி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்படிவம் குறித்து தெரிந்து கொள்ள இணைய முகவரி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
https://www.epfindia.gov.in/site_en/index.php
இந்த லிங்கை க்ளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *