தமிழகத்தில் நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வனிலை மையம் அறிக்கையில் தெரிவித்தது வடக்கு மற்றும் அதனையொட்டிய வங்கக் கடல் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகயுள்ளதாக தெரிவித்தது .இதனால், மன்னார் வளைகுடா மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரித்துள்ளது.
இதனையோட்டி ,பல்வேறு பகுதிகளில் பரவலாக, பலத்த மழை பெய்துவந்த நிலையில் , செங்கல்பட்டு மாவட்டத்தில் பல நீர்நிலைகள் நிறைந்தன. கடலூர் மாவட்டம் முழுக்க பரவலாக பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மழையால் சாலை ஓரங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
தொடர்மழையின் காரணமாக, 100க்கும் மேற்பட்ட வீடுகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு, சாலையில் விழுந்த மரத்தை அகற்றும் பணியில் கிராம மக்கள் ஈடுபட்டனர்.













; ?>)
; ?>)
; ?>)