• Tue. Mar 24th, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

* சேலத்தில் 5 ஆண்டுகளுக்குப் பிறகு மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் – குவிந்த பொதுமக்கள்*

சேலம் மாநகராட்சி ஆணையாளர் அலுவலகத்தில் கடந்த 5 ஆண்டுகளுக்குப் பிறகு மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் நீண்டநாள் பிரச்சினைகள், கோரிக்கைகளை மனுவாக எடுத்து வந்து நேரடியாக மாநகராட்சி ஆணையரிடம் கொடுத்தனர். இந்த குறை தீர்க்கும் கூட்டத்தில் அனைத்து துறை அதிகாரிகளும் பங்கேற்றனர்.

நீண்ட நாட்களுக்கு பிறகு மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெறுவதால் ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர்.


குறிப்பாக சாலை வசதி சாக்கடை வசதி, குடிநீர் வசதி, தெருவிளக்கு மற்றும் பிறப்பு, இறப்பு சான்றிதழ் போன்ற பல்வேறு பிரச்சினைகளை வலியுறுத்தி பொதுமக்கள் மனுக்களாக வழங்கினர். இங்கு பொதுமக்களின் குறைகளை கணினி மூலமாக பதிவு செய்து பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தகவல் தெரிவிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேலும் பொதுமக்களிடம் வாங்கும் மனுக்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் ஒரே நாளில் நேரடியாக சென்று ஆய்வு செய்து அதற்கான விளக்கத்தை அடுத்த கூட்டத்தில் பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

பொதுமக்களின் பிரச்சினைக்கு விரைந்து, காலம் தாழ்த்தாமல் நடவடிக்கை எடுத்து அடுத்த முறை மாநகராட்சி அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களுக்கு அது குறித்து முறையான விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் கூறினர்.