• Fri. Jan 9th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

எடப்பாடி பழனிசாமிக்கு நெருங்கியவர்கள் வீட்டில் வருமான வரித்துறை சோதனை…

Byகாயத்ரி

Jul 7, 2022

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நெருக்கமானவர்களின் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை செய்யப்பட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதிமுகவில் தற்போது பொதுச்செயலாளர் பதவியை பிடிக்க எடப்பாடி பழனிச்சாமி தீவிர முயற்சி எடுத்து வரும் நிலையில் திடீரென அவருக்கு நெருக்கமான செய்யாதுரை என்பவரது வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருகின்றனர். அதிமுக ஆட்சியில் ஒப்பந்ததாரராக பணியாற்றியவர் செய்யாதுரை என்பதும் அவரது வீடு அலுவலகங்கள் மற்றும் அவரது மகன்களின் வீடுகள் என பல்வேறு இடங்களில் சோதனை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி நெருக்கமான வடவள்ளி சந்திரசேகர் என்ற காண்ட்ராக்டர் வீட்டில் சோதனை செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.