22 காரட் கொண்ட ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து 2-வது நாளாக இன்றும் சரிந்துள்ளது..
சென்னையில் இன்று காலை தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு 68ரூபாயும், சவரனுக்கு 544 ரூபாயும் சரிந்துள்ளது.
சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று மாலை நிலவரப்படி கிராம் ரூ.4,740க்கும், சவரன் ரூ.37,920க்கும் விற்கப்பட்டது.. இன்று காலை நிலவரப்படி சென்னையில் 22காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.68 குறைந்து, ரூ4,672 ஆகவும், சவரனுக்கு ரூ.544 குறைந்து ரூ.37,376க்கும் விற்கப்படுகிறது.