• Thu. Oct 9th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

காஷ்மீரில் இருந்து தமிழகம் அழைத்து வரப்பட்ட நபர்கள்..,

ByPrabhu Sekar

Apr 24, 2025

காஷ்மீருக்கு சுற்றுலா சென்ற தமிழகத்தை சேர்ந்த 50 பேர் விமானம் மூலம் சென்னை அழைத்துவரப்பட்டது.

காஷ்மீரில் சுற்றுலா சென்று இருந்த 28 நபர்களை தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. மேலும் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்ட நிலையில் தமிழகத்தில் இருந்து அங்கு சுற்றுலா சென்ற 19 பேர் தமிழக அரசு உதவியுடன் மீட்கப்பட்டு இன்று அதிகாலை 2 மணியளவில் விமான மூலம் ஹைதராபாத் அழைத்துவரப்பட்டு அங்கிருந்து விமானங்களும் சென்னை அழைத்து வரப்பட்டனர். அவர்களை தமிழ்நாடு அரசு அதிகாரிகள் வரவேற்று அவர்களுக்கு சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் இன்று காலை தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 50 பேரை மீட்டு காஷ்மீரில் இருந்து ஹைதராபாத்துக்கு அழைத்து வரப்பட்டு அங்கிருந்து விமான மூலம் தற்போது சென்னை அடுத்தவரிடம் அவர்களையும் தமிழர் நலத்துறை அதிகாரிகள் வரவேற்று அவர்களின் சொந்த ஊருக்கு வாகனங்கள் மூலம் அனுப்பி வைத்தனர்.

முன்னதாக காஷ்மீரில் இருந்து மீட்கபட்டு அழைத்துவரப்பட்டவர்கள் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது மதுரை சேர்ந்த சுப்பிரமணி கூறுகையில்,

பஹல்காமில் தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு அங்கிருந்து ராணுவ அதிகாரிகள் எங்களை பத்திரமாக மீட்டு மலைக்கு கீழே அழைத்து வந்தனர். அதன் பிறகு தமிழ்நாடு அரசு அதிகாரிகள் எங்களை தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினார்கள். அனைத்து உதவிகளையும் செய்து தருவதாக கூறினார்கள். மேலும் எங்களது உடமைகள் அனைத்தையும் எப்படி பத்திரமாக கொண்டு வருவது என்பது குறித்தும் எங்களுக்கு அறிவுரை வழங்கினார்கள்.

மேலும் எங்களுடன் சுற்றுலா வந்திருந்த சந்துரு என்பவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் அங்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வந்தார். அவரை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா காஷ்மீர் முதல்வர் நேரில் சென்று நலம் விசாரித்து ஆறுதல் கூறினர். மேலும் தமிழ்நாடு அரசு அதிகாரி நேரடியாக சென்று அவர்களை கவனித்துக் கொண்டனர்.

அங்கு பணி புரியும் உள்ளூர்வாசிகள் மிகவும் அப்பாவித்தனமானவர்கள். இதுபோன்று காஷ்மீர் பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது என செய்தி வெளியாவது மூலம் அங்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் குறையும். இதனால் அவர்களின் தொழிலும் குறையும் என வேதனையுடன் அவர்களிடம் பகிர்ந்து கொண்டதாக தெரிவித்தனர். அது மட்டும் இன்றி இதுபோன்று கண்மூடித்தனமான தாக்குதலில் ஈடுபட்டவர்களை சுட்டுக் கொள்ள வேண்டும்.

இது போன்ற தாக்குதல்களுக்கு பயந்து காஷ்மீருக்கு செல்வதை நிறுத்தாமல் தொடர்ந்து நாம் காஷ்மீர் நோக்கி சென்று அங்குள்ள மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும் எனவும் தெரிவித்தனர்.