மக்களுக்காக பணி செய்கிறோம் என்பதை மறந்து போன ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளால் சிக்கல் ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஒன்றியம் ராஜகாபட்டியில் உள்ள தீத்தாம்பட்டியில் சிமெண்ட் சாலை அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக பொதுமக்களுக்காக வழங்கப்பட்டு வந்த குடிதண்ணீர் குழாய்களை 25 நாட்களுக்கு முன்பு ஒப்பந்ததாரர்கள் அகற்றினர்.
சிமெண்ட் சாலையும் அமைக்கவில்லை .

பொதுமக்களுக்கு குடிநீர் குழாயை அகற்றி அது தான் இவர்கள் செய்த பணி. தற்போது குடிதண்ணீர் வராமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
சாணார்பட்டி ஒன்றிய அரசு அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டால் அரசு அதிகாரிகள் தொலைபேசியை யாரும் எடுப்பதில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மாவட்ட ஆட்சியர் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் மெத்தனமாக செயல்படுவதால் யாரிடம் சொல்வது என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.













; ?>)
; ?>)
; ?>)