கரூர் மாவட்ட சோழிய வெள்ளாளர் சமுதாய மக்கள் கலந்தாய் கூட்டம் தான்தோன்றி மலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. முன்னதாக வ உ சி சிதம்பரனார் அவர்களின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து சோழிய வெள்ளாளர் சங்கங்களின் மாநில தலைவர் செந்தில் பிள்ளை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். கூட்டத்தில் வரும் ஜூலை மாதம் 13ஆம் தேதி திருச்சியில் நடைபெறும் ஒருங்கிணைந்த வெள்ளாளர், வேளாளர் மாநில மாநாடு சம்பந்தமாய் ஆலோசனை நடைபெற்றது.

கூட்டத்தில் 2027 ஆம் ஆண்டு மத்திய அரசு சாதிவாரி கணக்கஎடுப்பு நடத்தும் போது சோழியர் வேளாளர் சமுதாய சேர்ந்த பல்வேறு உட்புறவுகளைச் சேர்ந்த பொதுமக்கள் பொதுவாக இந்து வெள்ளாளர் என பதிவு செய்யுமாறு கேட்டுக் கொண்டோம், கரூர் மாவட்டத்தில் சோழிய வெள்ளாளர் மக்கள் அதிக அளவில் வசிக்கும் கிருஷ்ணராயபுரம் தொகுதியை கடந்த 50 ஆண்டுகளாக பட்டியல் இனத்தவருக்கான தொகுதி என என இருப்பதே வரும் 2026 ஆம் ஆண்டு தேர்தலில், இப்போது பொது தொகுதியாக மாற்ற வேண்டும்.

கரூர் மாவட்டத்தில் காவிரி ஆற்றில் புன் செய் புகழூர், மாயனூர் ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள தடுப்பு அணைகளில் இருந்து பைப்லைன் மூலமாக மாவட்டத்தில் உள்ள தாதம்பாளையம் ஏரி, பஞ்சப்பட்டி ஏரிகளில் தண்ணீர் நிரப்ப வேண்டும் எனவும் குளித்தலை வட்டம் லாலாபேட்டையில் வெற்றிலை ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும் எனவும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.