• Fri. Apr 24th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

கோவை புதிய ஆட்சியராக பவன்குமார் பொறுப்பேற்பு

BySeenu

Feb 13, 2025

கோவை மாவட்டத்தின் புதிய ஆட்சியராக பவன்குமார் ஐ.ஏ.எஸ். இன்று பொறுப்பேற்றார். அவரிடம் முந்தைய ஆட்சியர் கிராந்திகுமார் பாடி கோப்புகளை ஒப்படைத்தார்.
பவன்குமார் ஜி கிரியப்பனவர், கர்நாடகாவின் ஹாவேரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். பெங்களூரில் உள்ள PES பல்கலைக்கழகத்தில் மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறையில் பட்டப்படிப்பு முடித்துள்ளார். 2016 ஆம் ஆண்டு முதல் முயற்சியிலேயே யு.பி.எஸ்.சி தேர்வில் தேர்ச்சி பெற்று தமிழ்நாடு கேடர் ஐ.ஏ.எஸ். பணியில் சேர்ந்தவர். அவர் இதற்கு முன் திருவள்ளூர், நாகர்கோவில், தாராபுரம், கடலூர், திருப்பூர் ஆகிய இடங்களில் பல்வேறு அரசு பதவிகளில் பணியாற்றியுள்ளார். திருப்பூர் மாநகராட்சி ஆணையராகவும், தலைமைச் செயலாளரின் அலுவலகத்தில் அரசு இணைச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.

முன்னாள் ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தமிழ்நாடு திறந்த மேம்பாட்டு கழகம் மேலாண்மை இயக்குனராக தற்போது பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளார்.
பவன்குமாரின் நியமனம் கோவையில் புதிய மாற்றங்களை கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியராக பவன் குமார் க.கிரியப்பனவர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
போதைப் பொருள் மற்றும் கனிமமாக கொள்ளை குறித்து துறை சார்ந்த அதிகாரிகளிடம் ஆலோசனை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என புதிதாக கோவை மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்ற குமார் க.கிரியப்பனவர் கூறினார்.