• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்து தவறாக பேசுபவர்களுக்கு பவன்கல்யான் எச்சரிக்கை

Byவிஷா

May 8, 2025

‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்து சமூக ஊடகங்களில் தவறாகப் பேசுபவர்களுக்கு பவன்கல்யாண் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களை தாக்கியதை தொடர்ந்து, இதைப் பற்றி சில பிரபலங்கள் சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய பதிவுகளை செய்து வருகிறார்கள். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பவன் கல்யாண், “தேசிய பாதுகாப்பை குறைத்து மதிப்பிடும் வகையில் கருத்துக்களை வெளியிடுவதை பிரபலங்கள் தவிர்க்க வேண்டும். சமூக வலைதளங்களில் பதிவு செய்யும் போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். தேசத்துக்கு எதிரான கருத்துக்களை பகிர வேண்டாம்” என கூறினார்.
மேலும், “எல்லைகளை பாதுகாப்பது குறித்து ஏ, பி, சி, டி கூட தெரியாமல், ஆபரேஷன் சிந்தூர் குறித்து தெரு நாய்கள் குரைப்பது போல் சமூக ஊடகங்களில் பேச வேண்டாம். பிரபலங்கள் அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்பு தகவல்களை சரிபார்க்க வேண்டும். கவனக்குறைவாக தவறான தகவல்களை பரப்பி, தேசிய ஒற்றுமையை சீர்குலைக்க வேண்டாம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.