புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி நகரின் காவல் தெய்வமாக விளங்கும் பட்டமரத்தான் கோயிலில் ஆண்டுதோறும் பூச்சொரிதல் விழா ஒரு வார காலம் விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.

அந்த வகையில் இந்த ஆண்டு விழாவில் வெள்ளிக்கிழமை தொடங்கியது இதனை அடைத்து நகரின் பல்வேறு வீதிகளைச்சார்ந்த பொதுமக்கள் மற்றும் காவல்துறை, வருவாய்த்துறை, அஞ்சல்துறை, ஊரகவளர்ச்சித்துறை உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளைச்சார்ந்த அலுவலர்கள் பால்குடம் மற்றும் பூத்தட்டு எடுத்து வந்து பட்டமரத்தான் சுவாமிக்கு சாத்தி வழிபடுவர்.
65ம் ஆண்டு பூச்சொரிதல் விழாவின் தொடக்கமாக வெள்ளிக்கிழமை பொன்னமராவதி அழகியநாச்சியம்மன், ராஜராஜ சோழீஸ்வரர் மற்றும் வலையபட்டி மலையாண்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து நாட்டுக்கல், பாலமேடு, பாண்டிமான் கோயில் தெரு, வலையபட்டி உள்ளிட்ட பல்வேறு வீதிகளைச்சார்ந்த பொதுமக்கள் பால்குடம் மற்றும் பூத்தட்டு எடுத்து மேளதாளங்களுடன் ஊர்வலமாக வந்து பட்டமரத்தானுக்கு சாத்தி வழிபட்டனர்.
விழாவில் சுற்றுவட்டார பகுதிகளைச்சார்ந்த திரளான பொதுமக்கள் பங்கேற்று வழிபட்டனர். விழாவையொட்டி இசைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.மேலும் பாதுகாப்புஏற்பாடுககள் பொன்னமராவதி காவல்துறையினர் செய்திருந்தனர். ஏற்பாடுகளை பட்டமரத்தான் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.













; ?>)
; ?>)
; ?>)