பல்லாவரம் சட்டமன்றத் தொகுதியில் அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் படப்பை குமார் என்கிற திரு ரா. ராஜ்குமார் அவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், இன்று அவர் தொகுதியின் பல பகுதிகளில் வீதி வீதியாக சென்று பொதுமக்களிடம் நேரடியாக சந்தித்து வாக்கு சேகரித்தார். மக்களுடன் கலந்துரையாடிய அவர், தொகுதி முன்னேற்றத்திற்கான தனது திட்டங்களை விளக்கி ஆதரவு கோரினார். குறிப்பாக, குடிநீர் வசதி, சாலை மேம்பாடு, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் குறித்து அவர் உறுதியளித்தார்.
படப்பை குமார் அவர்கள் சென்ற இடமெல்லாம் பொதுமக்கள் ஆர்வத்துடன் வரவேற்று, ஆரத்தி எடுத்து அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பெண்கள், முதியவர்கள், இளைஞர்கள் என பலரும் பெருமளவில் திரண்டு, அவருக்கு ஆதரவு தெரிவித்து உற்சாகம் அளித்தனர்.

மேலும், கட்சித் தொண்டர்கள் உற்சாக கோஷங்களை எழுப்பி, தேர்தல் சூழலைக் களைகட்ட வைத்தனர். இந்த வீதி வீதி பிரச்சாரம் மூலம் பொதுமக்களுடன் நேரடி தொடர்பு ஏற்படுத்திக் கொண்டது தேர்தலில் வெற்றிக்கு வழிவகுக்கும் என கட்சியினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இதனுடன், பல்லாவரம் தொகுதியில் தேர்தல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருவது குறிப்பிடத்தக்கது.




