கலைஞர் கருணாநிதிக்கு கன்னியாகுமரியில் சிலை. சிறப்புநிலை பேரூராட்சி உறுப்பினர்களின் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றல்…
தமிழகத்தின் தலைநகர் சென்னையில் அண்ணா முதல்வராக இருந்த போது நடைபெற்ற இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு நடைபெற்ற போது, மெரினா கடற்கரையில் தமிழ் அறிஞர்கள் மட்டும் அல்லாது தமிழ் மொழியை பரப்பிய வெளி நாட்டு அறிஞர்களுக்கும் சிலை வைக்கப்பட்டது.

இந்தியாவின் தென் கோடி கன்னியாகுமரியில் கடல் நடுவே சுவாமி விவேகானந்தர், ஐயன் திருவள்ளுவருக்கு சிலைகள் அமைந்த வரிசையில் கன்னியாகுமரி ரவுண்டானா பகுதியில் முன்னாள் முதல்வர் அண்ணாவுக்கும், இந்திய பிரதமர் ராஜிவ் காந்தி சிலைகள் வரிசையில்,


பத்தாயிரம் ஆண்டில் (2000)கடல் நடுவே உள்ள கடற்பாறையில் திருவள்ளுவர் சிலை அமைத்த 25_ம் ஆண்டுவிழா எதிர் வரும் ஜனவரி புத்தாண்டு அன்று கன்னியாகுமரியில் நடக்கும் விழாவில் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் பெருமக்கள், தமிழ் அறிஞர்கள், கலைஞர்கள் பங்கேற்கும் விழா நடக்கும் நாளில்.01.01.2025) அன்று தேசப்பிதா மகாத்மா காந்தி அடிகளின் நினைவு மண்டபத்தின் முன் பகுதியில் உள்ள பூங்காவில் கலைஞரின் ஆழ் உயர வெங்கலச்சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கவுள்ளார்.


கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி கூட்டத்தில் கன்னியாகுமரியில் கலைஞர் சிலை அமைக்கும் தீர்மானத்தை தலைவர் குமரி ஸ்டீபன் கொண்டு வந்தார் . திமுக, காங்கிரஸ் கவுன்சிலர்கள் மேஜைய தட்டி கை ஒலி எழுப்பி ஆதரவு தெரிவித்தனர். தீர்மானத்தை எதிர்த்து பாஜக, அதிமுகவின் ஒற்றை உறுப்பினர்கள் வெளி நடப்பு செய்தனர்.
கன்னியாகுமரியில் கலைஞர் கருணாநிதிக்கு சிலை அமைக்க தீர்மானம் நிறை வேற்றிய தலைவர் குமரி ஸ்டீபன், திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள்.

அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் பாபு தலைமையில் பட்டாஸ் வெடித்தும், பேருந்து பயணிகள், பல்வேறு இடங்களில் இருந்து குமரி வந்திருந்த சுற்றுலா பயணிகளுக்கும் இனிப்பு வழங்கி அவர்களது மகிழ்ச்சியை கொண்டாடினார்கள்.

விழாவின் நிகழ்வாக காந்தி மண்டபம் முதல் சூரிய அஸ்தமனம் பகுதி வரை உள்ள சாலையின் இப்போதைய பெயரான கடற்கரை சாலை என்ற பெயரை மாற்றி ஐயன் திருவள்ளுவர் சாலை என மாற்றப்பட உள்ளது.
